விபத்தில் பலியானவரை எரித்த விவகாரம் போலீசார் விசாரணை அறிக்கை தர வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: விபத்தில் உயிரிழந்த லாரி டிரைவரின் உடலை காவல்துறையே எரித்தது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த லாரி டிரைவர் தாராசிங். இவர், கடந்த பிப்ரவரி 1ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகில் சாலையை கடக்க முயன்றபோது எதிரே வந்த கார் மோதியதில் உயிரிழந்தார். இந்நிலையில், தாராசிங்கின் சகோதரர் ராமேஸ்வர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் ெசய்தார். அதில், “தாராசிங்கின் உடலை வாங்க சென்றபோது போலீசார் கூலிப்படையை வைத்து என்னிடம் பணத்தை பறித்ததோடு தாராசிங்கின் உடலையும் திருவள்ளுரில் வைத்து எரித்துவிட்டனர்.

Advertising
Advertising

விபத்து ஏற்படுத்தியவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக போலீசார் நடத்திய  விசாரணையின் நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார். வழக்கு விசாரணை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.

Related Stories: