வேலை வாங்கி தருவதாக ரூ44 லட்சம் மோசடி போலீஸ்காரர் முருகன் சரண்

சென்னை: வில்லிவாக்கம் பாட்டை சாலையை சேர்ந்தவர் முருகன் (39). எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் பின்புறம் ஏ.ஆர்.காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அன்னிபெசன்ட் (39). சென்னை தலைமை செயலக பாதுகாப்பு பணியில் உள்ளார். மேற்கண்ட இருவரும் அரசு வேலை, எம்பிபிஎஸ் சீட் வாங்கித்தருவதாக ஏமாற்றி பலரிடம் ரூ44 லட்சம் மோசடி செய்துள்ளனர். புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த ஐசிஎப் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் காமேஸ்வரி, நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் கீழ்ப்பாக்கம் துணை ஆணையரிடம் புகார் அளித்ததன் பேரில், அந்த பெண் காவலரை கைது செய்து விசாரித்தனர்.

அதில், 16 பேரிடம் ரூ44 லட்சத்து 75 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில் தலைமறைவான முருகன் நேற்று மாலை ஐசிஎப் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில், இந்த மோசடியில் தலைமை செயலகத்தில் பணியாற்றும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி உள்பட, தலைமை செயலக ஊழியர்கள் பலருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இதில் தொடர்பு இருக்கிறது என்று போலீசார் முருகனிடம் தொடந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், கைது செய்யப்பட்ட பெண் காவலர் அன்னிபெசன்ட்டை நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் விடுவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுளள்து.

Related Stories: