×

மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ், திமுக ஆட்சி அமைந்ததும் ஜி.எஸ்.டி.வரி ரத்து

பள்ளிப்பட்டு, பிப்.21: மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ், திமுக ஆட்சி அமைந்ததும் நெசவு தொழிலை பாதிக்கும் ஜி.எஸ்.டி.வரி ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என  பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் நடந்த திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கினங்கவும், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு அறிவுறுத்தலின் பேரில், பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அத்திமாஞ்சேரி, கொடிவலசா, ஜங்காலுப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நேற்று முன்தினம்  நடந்தது. இந்த  கூட்டங்களுக்கு பள்ளிப்பட்டு ஒன்றிய செயலாளர் ஜி. ரவீந்திரா தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர்கள் சி.மோகன், எஸ்.ஏ.சதாசிவம், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 கூட்டத்தில், மத்திய அரசு விதித்த  ஜி.எஸ்.டி வரியால் நெசவுத்தொழில் மிகவும் மோசமான நிலைக்கு  தள்ளப்பட்டுள்ளது. எனவே, அதை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த கூட்டத்தில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளரும், சோழிங்கநல்லூர் தொகுதி எம்.எல்.ஏவுமான அரவிந்த் ரமேஷ் மேற்பார்வையாளராக கலந்து கொண்டு பேசுகையில், மத்தியிலும், மாநிலத்திலும் தி.மு.க, காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் ஜி.எஸ்.டி வரி ரத்து செய்யப்படும். பொதுமக்கள் வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார். இதில் மாவட்ட துணை செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன், பள்ளிப்பட்டு பேரூர் செயலாளர் எம்.ஜே.ஜோதிக்குமார், தலைமை கழக பேச்சாளர் முரசொலி மூர்த்தி, நிர்வாகிகள் டாக்டர் ராஜேந்திரன், எம்.கே.சுப்பிரமணி, எஸ்.எல்.நடராஜன், பி.வி.கதிரவன், முரளிசேனா, தேவராஜ், கோவிந்தசாமி, சுதா மோகன், அச்சுதன், சிவக்குமார், சுப்பிரமணி, எம்.கே.தாஸ், வரதன், பன்னீர்செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

Tags : GS Tvariari ,Congress ,DMK ,
× RELATED எம்எல்ஏக்கள் டி.ஜெ.கோவிந்தராஜன்,...