சிறுமியை கடத்தி திருமணம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது

ஈரோடு, பிப். 21:    ஈரோடு வீரப்பன் சத்திரம் ஏபிடி ரோடு மிட்டாய்காரர் தெருவை சேர்ந்த சண்முகம் மகன் அஜித்குமார் (21). கட்டிட தொழிலாளி. இவருக்கும், ஈரோடு பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் 16வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அஜித்குமார் கடந்த 14ம் தேதி சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று, திருப்பூரில் திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில் சிறுமியின் பெற்றோர் மகளை காணவில்லை என ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.  இந்நிலையில் ஈரோடு பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சுற்றிதிரிந்த இருவரையும் நேற்று காலை வீரப்பன் சத்திரம் போலீசார் மடக்கி பிடித்தனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். சிறுமியை மகளிர் போலீசார் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு உடற் பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதனையடுத்து மகளிர் போலீசார் அஜித்குமாரிடம் விசாரணை நடத்தி, அவர் மீது போக்சோ, குழந்தை திருமண தடுப்பு சட்டம், சிறுமியை கடத்தி செல்லுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: