கோபி அருகே வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்

கோபி, பிப். 21:   கோபி அருகே உள்ள அத்தாணி பெருமுகைபுதூர் உப்பிலி வண்ணாத்தர் தோட்டத்தை சேர்ந்தவர் பழனி (90). விவசாயி. நேற்று முன்தினம் இரவு பழனியும் அவரது மனைவி கருப்பாயம்மள் (80), பேத்தி தமிழ்ச்செல்வி (21), மவுனீஷ் (1) ஆகியோர் வழக்கம் போல் வேலையை முடித்துவிட்டு தூங்க சென்றுள்ளனர். அப்போது பல முறை மின்வெட்டு ஏற்படவே அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்து அமர்ந்துள்ளனர்.

  இதில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படவே மின்சாதனத்தில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. அருகில் உள்ளவர்கள் தீயை அணைக்க முற்படுவதற்குள், தீ மளமளவென பரவியது. இதில் வீட்டில் இருந்த டி.வி. மிக்கி, கிரைண்டர், சமையல் பொருட்கள், பீரோவில் இருந்த இடம் தொடர்பான ஆவணங்கள், 2.5 பவுன் நகை மற்றும்  ரூ.3.5 லட்சம் பணம் உள்ளிட்ட சுமார் ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது. மின்வெட்டு காரணமாக வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்ததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: