கூட்டுறவு சங்க செயலாளர்கள் ஆய்வு கூட்டம்

கோபி, பிப். 21:    கோபி சரக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்ககங்களின் செயலாளர்கள் ஆய்வு கூட்டம் கோபி மொடச்சூர் சாலையில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடந்தது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்தீபன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு கடன் வழங்குதல்,தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உள்ள பயிர் கடன் மற்றும் மத்திய கால கடன்களுக்கு, கடன்தாரர்களின் ஆதார் எண், செல்போன் எண் மாற்றம், மத்திய வங்கி சேமிப்பு கணக்கு எண் பெற்று கடன் கணக்குடன் இணைத்தல், சிறுபாசன கடன்கள், பண்ணை சாரா கடன்கள் மற்றும் சுய உதவிகுழுவிற்கு கடன் வழங்குதல் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: