பெருமாள் கோயிலில் லட்சார்ச்சனை

ஈரோடு, பிப். 21:   மாசி மகத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றன. இதில் ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் கமலவல்லி தயார் சன்னதிக்கு முன்பு யாக குண்டம் அமைக்கப்பட்டு லட்சார்ச்சனை விழா நடந்தது. அதிகாலை, 5.30 மணிக்கு கோ., பூஜையும், அதைத் தொடர்ந்து கமலவல்லி தாயாருக்கு திருமஞ்சனமும், மாகலட்சுமி ஹோமமும் நடந்தது. இதனையடுத்து பூரணாஹூதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 10 மணிக்கு முதற்கால லட்சார்ச்சனை, இரண்டாம் கால லட்சார்ச்சனை நடந்தது.    இந்த லட்ச்சார்ச்சனை யாகத்தில், ரங்கம், கும்பகோணம், கோவை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 20 பட்டாச்சாரியர்கள் பங்கேற்று நிகழ்ச்சியினை நடத்தினர். லட்ச்சார்ச்சனை நிறைவு பெற்றதும், கமலவல்லி தயாருக்கு குங்குமத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஈரோடு நகர் மற்றும் பிற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: