தொழிலாளியிடம் 30 ஆயிரம் பறிப்பு

அண்ணாநகர்: விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கோபி (57) என்பவர் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கோயம்பேடு பஸ் நிலையம் வந்து இறங்கினார். பின்னர் பெரம்பூர் செல்லும் மாநகர பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் திடீரென கோபி வைத்து இருந்த கைப்பையை பறித்துக்கொண்டு ஓடினார். இதில் அதிர்ச்சி அடைந்த கோபி ‘திருடன்.. திருடன்’ என கூச்சலிட்டார். அதற்குள் அந்த வாலிபர் தப்பி சென்றார். அந்த பையில் 30 ஆயிரம் பணம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணத்தை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: