சிவராஜ் மருத்துவ வளாகத்தில் இணைய தளம் ெவளியீடு

சேலம், பிப்.21: சேலம் சிவராஜ் மருத்துவ வளாகத்தில் ரிஷி ஆயுஷ் வெல்னஸ் சென்டரின் இணைய தளம் ெவளியிடப்பட்டுள்ளது.

சிவராஜ் மருத்துவ வளாகத்தில் ரிஷி ஆயுஷ் வெல்னஸ் சென்டர் இயங்கி வருகிறது. இதில் சித்தா, ஹோமியோபதி, இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவ முறையில் சிறப்பு மருத்துவர்களை கொண்டு ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. அனைத்து விதமான வியாதிகளுக்கும் நாட்பட்ட நோய்களுக்கும் சிறந்த சிகிச்சை வழங்கப்படுகிறது. தினசரி யோகாசன தியான வகுப்புகள் நடைபெறுகிறது. இந்திய முறை மருத்துவத்திற்கென 100 படுக்கை வசதிகள் கொண்ட ஒரே ஆயுஷ் மருத்துவமனை. இதில் எக்ஸ்ரே, இசிஜி பரிசோதனை நிலையங்கள் உள்ளடங்கியது. இங்கு ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

இந்த மருத்துவமனையின் www.rishwellnesscenter.com இணையதளத்தை, மொரிசியஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கல்வித்துறை மந்திரியுமான ஆர்முகம் பரசுராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கல்லூரியின் நிர்வாக இயக்குநர் சிவராஜ் கல்பனா, தலைமையில், கல்லூரி முதல்வர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் டாக்டர் சிவராஜ் கல்பனா, சர்வதேச தரத்திற்கு இணையான எங்கள் ரிஷி ஆயுஷ் வெல்னஸ் சென்டரின் மருத்துவ சேவையினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொண்டார்.

Related Stories: