மின்சார வாரியத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி

சேலம், பிப்.21: உடையாப்பட்டி தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழக மேற்பார்வை பொறியாளர் ஞானபெத்உஷீபா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஐடிஐ.,யில் ஒயர்மேன் மற்றும் எலக்டீரிசியன் படிப்பில் தேர்ச்சி பெற்று, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு ஒரு வருட தொழில் பழகுநர் பயிற்சி 15 நபர்களுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் காலை 11 மணிக்கு உடையாப்பட்டி மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் இதற்கான நேர்காணல் நடக்கிறது. இதில் தகுதியுடைய நபர்கள் கலந்து கொள்ள வரும்போது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கல்வி மாற்றுச்சான்றிதழ், ஐடிஐ ஒயர்மேன், எலக்டீரீசியன் நேஷனல் டிரேடு சான்றிதழ், புரோவிஷனல் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளியாக இருந்தால், அதற்கான சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்கள் ஆகியவற்றின் உண்மை மற்றும் ஒளிபட நகல் (2 செட்) ஆகிய ஆவணங்களுடன் வந்து கலந்து கொள்ளலாம். ஓராண்டு பயிற்சி காலத்தில் தொழிற்பழகுநர் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையாக ₹7,709 வழங்கப்படும். இந்த நேர்காணலில் கலந்து கொள்பவர்களுக்கு எவ்விதமான பயணப்படி சலுகைகளும் வழங்கப்படமாட்டாது.  இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: