×

இடைப்பாடி வட்டார காங்கிரஸ் கட்சி கூட்டம்

இடைப்பாடி, பிப்.21: பூலாம்பட்டியில் இடைப்பாடி வட்டார காங்கிரஸ் கட்சியின், பூத் கமிட்டி மற்றும் ஊழியர்கள் கூட்டம் நடந்தது.
சேலம் மேற்கு மாவட்ட இடைப்பாடி சட்ட மன்ற தொகுதி, இடைப்பாடி வட்டார காங்கிரஸ் கட்சியின், பூத் கமிட்டி மற்றும் ஊழியர்கள் கூட்டம், பூலாம்பட்டியில் நேற்று நடந்தது. இடைப்பாடி வட்டார தலைவர் வெங்கடாஜலம் தலைமை வகித்தார். பூலாம்பட்டி பேரூர் தலைவர் ராஜேந்திரன், கணேசன், இடைப்பாடி நகர தலைவர் அசோக்குமார், இடைப்பாடி தொகுதி பொறுப்பாளர் விஜயகுமார், பூலாம்பட்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆறுமுகம், வெங்கடாஜலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மீனவர் அணி மாவட்ட தலைவர் அருணாசலம், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பிரகாசம் நன்றி கூறினார்.

Tags : Congress Party ,meeting ,
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...