×

கமுதி இந்தியன் ஓவர்சிஸ் வங்கி அருகே உயிர்பலி வாங்க காத்திருக்கும் வாறுகால்

கமுதி, பிப். 21: கமுதி இந்தியன் ஓவர்சிஸ் வங்கி அருகே உள்ள சாலை மிகவும் குறுகலான சாலை ஆகும். இப்பகுதியில் பேரூராட்சி அலுவலகம், பேருராட்சி வாட்டர் டேங்க், தபால் நிலையம் ஆகியவை உள்ளன. பேருந்து நிலையம் செல்லும் இந்த சாலை இந்த இடத்தில் வளைந்து காணப்படும். இச்சாலையின் ஓரத்தில் வாறுகால் மூடப்படாமல் மிகவும் பள்ளமாக திறந்தே காணப்படுகிறது. இரண்டு பஸ்கள் எதிரெதிரே வந்தால் நடந்து செல்வோர் அல்லது இரு சக்கர வாகனங்களில் செல்வோர் இந்த வாறுகாலில் விழும் நிலைமை ஏற்படும். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு முதியவர் ஒருவர் இந்த வாறுகாலில் விழுந்து சிறிய காயத்துடன் தப்பினார். வங்கியின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள், ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளதால் இப்பகுதியில் மேலும் போக்குவரத்து இடையூறுக்கு வழி வகுக்கிறது. எனவே இப்பகுதியில் வேகத்தடை அமைத்தும், வாறுகாலை சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Kamuthi ,Indian Overseas Bank ,
× RELATED திண்டுக்கல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தீ விபத்து