×

தொண்டியில் ஐக்கிய ஜமாத் சார்பில் பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

தொண்டி, பிப். 21: காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பலியான இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தொண்டியில் ஐக்கிய ஜமாத் சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தீவிரவாதிகள் தாக்குதலுக்கு 40க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் பலியானார்கள். இச் செயல் உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. இந்நிலையில் கொடூர தாக்குதலுக்கு பலியான இந்தி ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நேற்று தொண்டி ஐக்கிய ஜமாத் சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. ஐக்கிய ஜமாத் தலைவர் அபுபக்கர் தலைமை வகித்தார். பொருளாலர் சாதிக் பாட்சா, துணைத் தலைவர் அப்துல்லா, செயலாளர் அயூப்கான், ஜலீல் ஆலிம் மற்றும் ஜமாத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர். செயலாளர் செய்யது அலி வரவேற்றார்.

அபுபக்கர் பேசுகையில், ‘கோழைத்தனமான இந்தி தீவிரவாத செயலை ஜக்கிய ஜமாத் வண்மையாக கண்டிக்கிறது. யார் இச்செயலில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இஸ்லாம் ஒருபோதும் தீவரவாதத்தை அனுமதித்து கிடையாது. இந்திய இறையாண்மைக்கு செயல்படும் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்’ என்றார். துணைத் தலைவர் ஜவஹர் அவிகான் நன்றி கூறினார். புகார் பெட்டிகூடுதல் டிக்கெட் கவுண்டர் தேவைபயணிகள் சிரமத்தை தவிர்க்க, ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் கூடுதல் டிக்கெட் கவுண்டர் அமைக்கப்பட வேண்டும். கேசவன். ராமநாதபுரம். விளம்பர போர்டுகளை அகற்ற வேண்டும் ராமநாதபுரம், ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் வைக்கப்படும் விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் கவனத்தை திசை திருப்பும் விளம்பர போர்டுகளை அகற்ற நடவடிக்கை தேவை.

Tags : victim soldiers ,United Jamaat ,
× RELATED கோவை மாவட்டத்தில் நாளை ரம்ஜான் தொழுகை