×

கீழக்கரை பகுதியில் டெங்கு காய்ச்சல் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கீழக்கரை, பிப். 21: கீழக்கரை 500 பிளாட் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கீழக்கரை நுகர்வேர் நலச்சங்கத்தின் செயலாளர் செய்யது இபுராகிம் கூறுகையில், ‘கீழக்கரை 500 பிளாட் என்ற பகுதியில் 20க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கீழக்கரை, ராமநாதபுரம் மற்றும் மதுரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஹாஜர் நூரா (7), சுமைரா (4) உள்ளிட்ட 5க்கும் மேற்பட்டவர்களுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யபட்டுள்ள நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த பல நாட்களாக 500 பிளாட் பகுதியில் குப்பைகள் எடுக்கப்படாமல் சுகாதாரம் கேள்விக் குறியாகி உள்ளது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் இன்றுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. கலெக்டர் உடனடியாக இப்பகுதியில் கிடக்கின்ற குப்பைகளை அகற்றி, சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து இப்பகுதி மக்களின் அச்சத்தை போக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : area ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...