×

மாநில டெபிள் டென்னிஸ் போட்டி காலிறுதிக்கு மதுரை, காஞ்சிபுரம் அணிகள் தகுதி

மதுரை, பிப். 21: மாநில அளவிலான கூடைபந்து, டேபிள் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் அடுத்த தகுதி சுற்றுக்கு முன்னேறின.
முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கூடை பந்தாட்டம், டேபிள் டென்னிஸ் ஆகிய விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் துவங்கியது. போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு கூடைபந்தாட்ட கழக தலைவர் ராஜ்சத்தியன் செய்திருந்தார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் மாலதி மேற்பார்வையில் போட்டிகள் நடந்து வருகிறது. கூடைபந்தாட்ட போட்டியில் ஆண்கள் பிரிவில் 31 அணியும், பெண்கள் பிரிவில் 29 அணிகள் மோதி வருகின்றன. முதல் கட்டம் நாக்அவுட் முறையில் போட்டிகள் நடந்தது.

ஆண்கள் பிரிவில்,  காஞ்சிபுரம் மாவட்ட அணியும், பெண்கள் பிரிவில் மதுரை, சென்னை, கடலூர்,  தூத்துக்குடி, திண்டுக்கல் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. அதுபோல டேபிள்டென்னிஸ் போட்டியில் காலிறுதிப்போட்டிக்கு 8அணிகள் தகுதி பெற்றுள்ளன. அந்த வகையில் ஆண்கள் பிரிவில் சென்னை, ஈரோடு, மதுரை, காஞ்சிபுரம் அணிகளும், பெண்கள் பிரிவில்  சென்னை, மதுரை, காஞ்சிபுரம், ஈரோடு அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த போட்டியில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.75ஆயிரம், 2ம் இடத்திற்கு ரூ.50ஆயிரம் மற்றும் 3ம் இடத்திற்கு ரூ.25ஆயிரம் வழங்கப்படும். இன்றும் போட்டிகள் நடைபெறுகின்றன.

Tags : Kanchipuram ,Madurai ,tournament quarter-finals ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...