தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு செக்காணுரணி அரசு டிப்போவில் ஊழியர்கள் பற்றாக்குறையால் பஸ்கள் பராமரிப்பில் தொய்வு

திருமங்கலம், பிப். 21: செக்காணுரணியில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக டிப்போவில் பஸ்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், மெக்கானிக் உள்ளிட்ட ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பஸ்களின் பராமரிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக செக்காணுரணியில் டிப்போ துவக்கப்பட்டது. உசிலம்பட்டி, திருமங்கலம் கிளைகளிலிருந்து பஸ்கள் பிரிக்கப்பட்டு புதிய இந்த டிப்போ துவக்கப்பட்டது. 26 பஸ்களுடன் துவக்கப்பட்ட இந்த டிப்போவில் தற்போது 42 பஸ்கள் உள்ளது. இதில் மூன்று வெளியூர் பஸ்களாகும். டிரைவர், கண்டக்டர்கள் போக தொழில்நுட்ப பணிகளான மெக்கானிக், எலெக்ட்ரிசியன் 5 பேர் தற்போது பணிமாறுதலாகி போய் விட்டனர். இதனால் தற்போதுள்ள 7 ஊழியர்களும் மாற்றி, மாற்றி பணிகளை செய்ய வேண்டியுள்ளது.

ஷிப்ட் முறையில் இவர்களுக்கு வேலைக்கு வருகின்றனர். ஒரு ஷிப்டிற்கு 12 பேர் இருந்த நிலையில் தற்போது 7 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் பஸ்களில் பராமரிப்பு பணிகளில் தொய்வு ஏற்படும் நிலை உள்ளது. பஸ்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஊழியர்கள் பணிசுமையால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வார விடுமுறை கூட எடுக்க முடியாத நிலை உண்டாவதால் அவர்கள் மன உளைச்சலில் பணியாற்றி வருகின்றனர். டிப்போவில் போதுமான வசதிகள் இல்லாத காரணத்தால் இங்குள்ள ஊழியர்கள் பலரும் பிற டிப்போக்களுக்கு பணிமாறுதலாகி சென்று விடுகின்றனர். இதனால் செக்காணுரணி டிப்போவில் ஊழியர்கள் பணியாற்ற தயக்கம் காட்டும் நிலை உண்டாகியுள்ளது. மதுரை கோட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஊழியர் பற்றாக்குறையை போக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: