மாலையில் சாலையில் அச்சுறுத்தும் அபாய பள்ளம்

திருப்பரங்குன்றம், பிப்.21: திருப்பரங்குன்றத்தில் சாலையில் உள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் பூங்கா பஸ் ஸ்டாப் அருகே திருமங்கலம்-மதுரை சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக சாலையில் செல்கிறது. இதனால் சாலையில் அரிப்பு ஏற்பட்டு அந்த இடத்தில் தண்ணீர் தேங்குவதால், சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் டூவீலரில் செல்வோர் அவ்வப்போது தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். இதனால் இப்பகுதியினர் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்காக பள்ளத்தில் பழைய டயர்களை வைத்துள்ளனர்.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், நெடுஞ்சாலை துறையினர் சாலையை செப்பனிட தயாராக இருந்தும் மாநகராட்சியினர் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யாததால், நெடுஞ்சாலை துறையினர் வேறு வழியின்றி சாலையை சீரமைக்க வில்லை. இதுபற்றி மாநகராட்சியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடன் குழாய் உடைப்பை சரி செய்து சாலையை சீரமைத்து வாகன ஓட்டிகளை ஆபத்தில் இருந்து காப்பதோடு வீணாகும் குடிநீரையும் தடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: