சித்தரேவு ஊராட்சியில் சுகாதார சீர்கேடு நாளுக்குநாள் அதிகரிப்பு

செம்பட்டி, பிப். 21: சித்தரேவு ஊராட்சியில் சுகாதார சீர்கேடுகள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஆத்தூர் தாலுகா, சித்தரேவு ஊராட்சிக்குட்பட்டது நெல்லூர், கொண்டமநாயக்கன்பட்டி, குப்பிநாயக்கன்பட்டி, கதிர்நாயக்கன்பட்டி, லட்சுமிபுரம், நெல்லூர்காலனி, ரங்கராஜ்புரம் காலனி, சிங்காரக்கோட்டை, உதயகரம் காலனி, ஒட்டுப்பட்டி, சங்காரெட்டிகோட்டை, செல்லம்பட்டி, கோட்டைபட்டி, நல்லாம்பிள்ளை, சாலைபுதூர் கிராமங்கள். இப்பகுதிகளில் சுகாதார சீர்கேடுகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோட்டைபட்டியில் உள்ள நியாய விலைக்கடை முன்பு கழிவுநீர் குளம்போல் பல நாட்களாக தேங்கி கிடக்கிறது.

இதனால் கடைக்கு வரும் பொதுமக்களும், அவ்வழியே நடந்து செல்லும் மாணவ மாணவிகள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் கழிவுநீரில் பல்கி பெருகும் கொசுக்களால் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்களும் பரவி வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சித்தரேவு ஊராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளை சரிசெய்ய வேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை

விடுத்துள்ளனர்.

Related Stories: