கூடுதல் உதவியாளரை நியமிக்க வலியுறுத்தல்

சின்னசேலம், பிப். 21: சின்னசேலம் ஆதார் மையத்தில் கூடுதல் உதவியாளரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துளளனர்.

ஆதார் என்பது இந்திய தனித்துவ ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட சரிபார்ப்பு நடைமுறைகளின்படி நம் நாட்டில் வசிப்பவர்களுக்கு வழங்கப்

படும் 12 இலக்க எண்ணாகும். இந்த அட்டையை கொண்டு அரசின் திட்டங்களை, மானியங்களை பெற முடியும். சிறுவர் முதல் பெரியவர் வரை ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த அட்டையில் திருத்தம், விடுபட்டவர்களுக்கு, சிறுவர்களுக்கு புது அட்டை எடுத்தல் போன்ற பல்வேறு பணிகளுக்கு ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் உள்ள ஆதார் மையத்திலும் தேவையானவர்களுக்கு செய்து தரப்படுகிறது. சின்னசேலம் ஆதார் மையத்தை பொறுத்தவரையில் ஒரே ஒரு உதவியாளர் மட்டும் உள்ளார். ஆனால் இந்த ஆதார் மையத்திற்கு சின்னசேலம் தாலுகாவில் உள்ள 100 கிராமங்களை சேர்ந்த மக்கள் வந்து ஆதார் திருத்தம் செய்து கொண்டும், புதிய அட்டை எடுத்துக் கொண்டும் செல்கின்றனர்.

ஆனால் சமீபகாலமாகவே இந்த மையத்தில் சிக்னல் பிரச்னை, கரண்ட் பிரச்னையால் இங்கு வரும் ஏராளமான வாடிக்கையாளர்கள் திரும்பி செல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மேலும் இந்த ஆதார் மையத்தில் தற்போது ஒரே ஒரு உதவியாளர் மட்டுமே உள்ளார். ஆனால் மையத்திற்கு ஒரு நாளைக்கு சுமார் 50 முதல் 100 பேர் திருத்தம் செய்ய வருகின்றனர். மேலும் மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என பலரும் வந்து பல மணி நேரம் காத்திருக்கின்றனர். இதனால் அவர்களுக்கு கால விரயம் ஏற்படுகிறது. ஆதார் திருத்தம் என்பது ஒரு சில வங்கி, இ-சேவை மையங்களிலும் செய்யலாம். ஆனால் வாடிக்கையாளர்கள் திருத்தம் என்றால் ஆதார் மையத்திற்குத்தான் வருகின்றனர். எனவே, சின்னசேலம்  வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்தில் கூடுதல் உதவியாளரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: