வன விலங்குகளை பிடிக்க கோரிக்கை

திட்டக்குடி, பிப். 21: திட்டக்குடி பகுதியில் கரும்பு, நெல், மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பயிர்களை அழிக்கும் காட்டு பன்றிகளை வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.திட்டக்குடி தாலுகாவில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பும், நெல், மக்காச்சோளம், மரவள்ளி  பயிரிடப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக திட்டக்குடி தாலுகாவில் மழையே பொழியாததால் நாங்கூர் வன சரகத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் தண்ணீரின்றி வறண்டுபோயுள்ளன.  வன சரகத்தில் உள்ள பல்லாயிரம் விலங்குகளுக்கு போதிய குடிநீர் இல்லாததால் அருகில் உள்ள வயல்களில் உள்ள கரும்பு, நெல் ஆகியவற்றை மேய்ச்சலுக்காகவும், குடிநீருக்காகவும் அழிக்கின்றன.

 இதனால் பல்லாயிரம் ரூபாய்  செலவு செய்து விளைவித்த பயிர்கள் நாசமாவதை கண்டு விவசாயிகள் மிகுந்த துயரத்தில் உள்ளனர். எனவே உடன் வனத்துறையினர் பயிர்களை நாசம் செய்யும் வன விலங்குகளை பிடித்து காட்டில் கொண்டுபோய் விடவும், வன பகுதியை சுற்றிலும் வன விலங்குகள் வெளியேறாமல் தடுக்க போதிய குடிநீர் தொட்டி அமைக்கவும், காட்டை சுற்றிலும் சோலார் மின் கம்பி வேலிகள் அமைக்க  வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: