டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து திண்டிவனத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

திண்டிவனம், பிப். 21: திண்டிவனம்- மயிலம் ரோட்டில் ஏற்கனவே டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்

படையில் இந்தக்கடை அகற்றப்பட்டது. தற்போது மீண்டும் இப்பகுதியில் மதுக்கடை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதையறிந்ததும் அந்த பகுதி மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டிவனம் இன்ஸ்பெக்டர் சீனிபாபு தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறும்போது, ஏற்கனவே இங்கு மதுக்கடை இருந்தபோது தினமும் இரவு நேரங்களில் குடிமகன்கள் குடித்துவிட்டு பாட்டில்களை தெருவில் வீசி விட்டுச்சென்றனர்.

மேலும் வாந்தி எடுத்து ஆபாசமாக பேசி அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டனர். இதனால் அந்தக்கடை அகற்றப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் மனுக்கள் கொடுத்து இருப்பதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து மீண்டும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்குமாறு இன்ஸ்பெக்டர் சீனிபாபு அறிவுறுத்தினார். அதனை ஏற்ற பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது

Related Stories: