×

மடுகரை அரசு பள்ளியில் அதிகாரி திடீர் ஆய்வு

நெட்டப்பாக்கம், பிப். 21: நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை அரசு தொடக்கப் பள்ளியில் வட்டம் (4) பள்ளி துணை ஆய்வாளர் சொக்கலிங்கம் ஆய்வு மேற்கொண்டார். ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளிடம் எழுத்து திறன், கற்றல் திறன் குறித்து அவர் ஆய்வு செய்தார். மேலும் மாணவர்களிடையே ஆசிரியர்களின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் தலைமையாசிரியர் புவனேஸ்வரி மற்றும் ஆசிரியர், மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். இது குறித்து துணை ஆய்வாளர் சொக்கலிங்கம் கூறுகையில், வட்டம் (4) பிரிவில் 36 பள்ளிகள் அடங்கும், இதில் மடுகரை அரசு தொடக்கப் பள்ளி தூய்மை, விளையாட்டு திறன், கல்வி என அனைத்திலும் மற்ற பள்ளிகளுக்கு முன்மாதிரியாக விளங்கிறது என்றார்.

Tags : Officer ,Government School ,Madukarai ,
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிக்க...