தடை செய்யப்பட்ட பகுதியில் பேனர் வைத்தால் நடவடிக்கை

புதுச்சேரி, பிப். 21: பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாகூர் கொம்யூன் பஞ்சாயத்தை சேர்ந்த 15 கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் விளம்பரம், கட்-அவுட் மற்றும் பேனர்கள் வைப்பதற்கு வரையறுக்கப்பட்டுள்ள பகுதிகள் குறித்த அறிவிப்பு புதுவை மாநில அரசிதழில வெளியிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் மேற்படி அரசிதழில் குறிப்பிட்டுள்ள வரையறுக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் உரிய அனுமதி பெற்று விளம்பரம், கட்-அவுட் மற்றும் பேனர்கள் வைத்து கொள்ளலாம் என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகின்றது. எனவே, தடை செய்யப்பட்ட பகுதிகள் மற்றும் உரிய அனுமதி பெறாத பகுதிகளில் விளம்பரம், கட்-அவுட் மற்றும் பேனர்கள் வைப்பவர்கள் மீது நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து விளம்பர வரி சட்டம் 1976ன் படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: