பிளஸ்-2 தனித்தேர்வர்களுக்கு நாளைமுதல் ஹால் டிக்கெட்

புதுச்சேரி, பிப். 21: புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் குப்புசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2019 மார்ச் மாதம் நடைபெறவுள்ள மேல்நிலை 2ம் ஆண்டு (பிளஸ்-2) பொதுத்தேர்வு எழுத, விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) நாளை (22ம் தேதி) மதியம் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வு கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று முதலில் `HALL TICKET DOWNLOAD’ என்ற வாசகத்தினை `Click’ செய்தால் தோன்றும் பக்கத்தில் உள்ள `HIGHER SECONDARY SECOND YEAR EXAM MARCH 2019 - PRIVATE CANDIDATE - HALL TICKET PRINT OUT’ என்ற வாசகத்தினை `Click’ செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தால், அவர்களுடைய தேர்வுக்கூட அனுமதி சீட்டு திரையில் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பழைய பாடத்தின்படி (மொத்தம் 1200 மதிப்பெண்கள்) தேர்வெழுதும் தனித்தேர்வர்கள் மட்டும் மொழி பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு ெமாழி (தமிழ்) பாடத்தில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறை தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வு கூட அனுமதி சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், 2019 மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்துக்கு சென்று அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: