×

மார்த்தாண்டத்தில் பரபரப்பு பழைய பொருட்கள் ேசகரிப்பு குடோனில் பயங்கர தீ 10 லட்சம் பொருட்கள் சாம்பல்

மார்த்தாண்டம், பிப். 21: மார்த்தாண்டம் பம்மம் பகுதியை சேர்ந்தவர் முகமது அலி (47). மார்த்தாண்டத்தில் பழைய பொருட்களை வாங்கும் ஆக்கர் கடை நடத்தி வருகிறார். இங்கு வாங்கும் பழைய பொருட்களை குடோனில் சேமித்து மொத்தமாக விற்பனை செய்வது வழக்கம். இந்த குடோன் கொடுங்குளம் சாலையில் உள்ளது. சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்தகுடோனில் பழைய பேப்பர், பிளாஸ்டிக், இரும்பு உட்பட ஏராளமான பொருட்களை போட்டு வைத்திருந்தனர். இந்த நிலையில், நேற்று காலை 10 மணியளவில் அந்த குடோன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைக்கண்ட இளைஞர்கள் சிலர் அக்கம் பக்கம் வீடுகளில் தண்ணீர் கேட்டுள்ளனர். ஆனால் யாரும் தண்ணீர் கொடுக்க முன்வரவில்லை. இந்த நிலையில் காற்று வேகமாக வீசியதால் தீ பரவ தொடங்கியது. பின்னர் தீ கொளுந்துவிட்டு எரிந்தது. இது குறித்து குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடம் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். அப்போது தீயணைப்பு வாகனத்தில் திடீரென தண்ணீர் தீர்ந்தது. இதனால் தீ கட்டுக்குள் வராமல் மீண்டும் பரவியது. இதில், அப்பகுதியில் நின்ற சுமார் 10க்கும் மேற்பட்ட தென்னை உள்ளிட்ட மரங்களும் எரிந்து நாசமாயின. இதனால் அப்பகுதி ஒரே புகை மண்டலமாக மாறியது.

தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் நிரப்ப வாகனத்தை எடுத்துச் சென்றனர். இதையடுத்து குலசேகரம், தக்கலை தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களும் மார்த்தாண்டம் மேம்பால பணியில் ஈடுபட்டிருந்த டேங்கர் லாரிகளும் வரவழைக்கப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபட்டன. இதனிைடயே குழித்துைற தீயணைப்பு வாகனமும் மீண்டும் தண்ணீர் நிரப்பி  கொண்டு வந்து சேர்ந்தது. பின்னர் அனைத்து வாகனங்களும் சேர்ந்து சுமார் இரண்டரை மணி நேரம் போராடி தீயை அணைத்தன. தீ அணைக்கப்பட்டதால் இந்த குடோனுக்கு அருகில் இருந்த மரப்பட்டறை மற்றும் குடியிருப்புகள் தீ விபத்தில் இருந்து தப்பின. இச்சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது. தீ விபத்திற்கான காரணம் குறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Old Testament Guton ,
× RELATED குழித்துறை மறைமாவட்ட பொது நிலையினர் அமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு