திருவழுதிநாடார்விளை அந்தோணியார் ஆலயத்தில் திருப்பலி

ஏரல், பிப். 21:  திருவழுதிநாடார்விளை புனித கரிந்தகை அந்தோணியார் திருத்தலத்தில் நற்செய்தி கூட்டம், ஆசீர்வாதம் மற்றும் திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. ஏரல் சூசையப்பர் ஆலயம் பங்கு குரு ஜான்சன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆசீர்வாதம் மற்றும் திருப்பலி நடத்தினார். தொடர்ந்து ஆலயம் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சேதுக்குவாய்த்தான் ஆசிரியர் ஜெயராஜ், அதிசயபுரம் ராபர்ட், தூத்துக்குடி தொழிலதிபர்கள் சகாயராஜ், லியோபிரபாகர், விஜயகுமார், ஜவஹர், பழங்குளம் செல்வம், முக்காணி கீதா நற்பணி மன்றம் தலைவர் கிளமன்ட், புன்னக்காயல் டெல்பின்ஸ், ரோசாரி, தமியான், சேர்ந்தமங்கலம் அந்தோணி, ஏரல் ஓத்தாசை மாதா ஆலயம் பங்கு தலைவர் தாமஸ் மற்றும் நடேசன், எடிசன், ரெக்ஸ், சுப்பிரமணியபுரம் இருதயசேகர், ஞானசேகர் மற்றும் திருவழுதிநாடார்விளை அந்தோணியார் ஆலய பங்கு மக்கள் திரளாக பங்கேற்றனர்.

Advertising
Advertising

Related Stories: