மக்களின் அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படும் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேச்சு

ஓட்டப்பிடாரம், பிப்.21: பொதுமக்களின் அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படும் என்று கிராம சபை கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ பேசினார். ஓட்டப்பிடாரம் யூனியன் ஜம்புலிங்கபுரம் பஞ்சாயத்து புதூர் கிராமத்தில் திமுக ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகையா தலைமை வகித்தார். ஒன்றிய பிரதிநிதி ராமர், மாவட்ட பிரதிநிதி ஜோசப்மோகன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மாடசாமி முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் பேசுகையில் தற்போது விலைவாசி அதிகமான உயர்ந்து வருகிறது. பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற ஓட்டப்பிடாரம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரும் கிடையாது உள்ளாட்சி பிரதிநிதிகளும் கிடையாது. இதுபோன்று கிராமசபை கூடடம் நடத்தி மக்களின் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் கலெக்டரின் கவனத்துக்கு எடுத்து சென்று நிறைவேற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். கூட்டத்தில் மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் கருணாகரன், மாவட்ட ஆதிதிராவிட அணி துணை அமைப்பாளர் சுகுமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ஞானதுரை, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருள்ராஜ், ஒன்றிய தொண்டரணி துணை அமைப்பாளர் வேலு உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் தருவைக்குளம், வெள்ளப்பட்டி, எஸ்.கைலாசபுரம் பகுதிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.

Advertising
Advertising

உடன்குடி:   உடன்குடி ஒன்றியம், வெள்ளாளன்விளை ஊராட்சி பகுதியில் திமுக சார்பில் கிராமசபை  சிறப்பு கூட்டம் ஒன்றியச் செயலாளர் பாலசிங் தலைமையில் நடந்தது. தெற்கு மாவட்ட பொருளாளர் ராமநாதன், சிறுபான்மை நலஉரிமைப்பிரிவு மாவட்ட அமைப்பாளர் ராஜேஷ், பெப்சி முரளி, இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் பில்லா எஸ்ஜே ஜெகன்,  இலக்கிய அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரஞ்சன், உடன்குடி நகரச் செயலாளர் ஜாண்பாஸ்கர் முன்னிலை வகித்தனர். வெள்ளாளன்விளை ஊராட்சி செயலாளர் அற்புத அரசி வரவேற்றார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் மாணவர் அணி மாநில துணைச்செயலாளர் உமரிசங்கர், மகளிர் அணி மாநில துணை அமைப்பாளர் குமாரிவிஜயகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் வசீகரன், முத்துசெல்வன், மாவட்ட அமைப்பாளர்கள் மகளிர் அணி ஜெசி பொன்ராணி, நெசவாளர் அணி மகாவிஷ்ணு, மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ், வர்த்தக அணி மாவட்ட  துணை அமைப்பாளர் ரவிராஜா, முன்னாள் கவுன்சிலர் முகமதுசலீம்,  சிறுபான்மை அணி மாவட்ட  துணை அமைப்பாளர் சிராசுதீன், இளைஞர் அணி ஒன்றியச் செயலாளர் சிவபிரகாஷ், உடன்குடி நகர பொருளாளர் தங்கம், வக்கீல்  அணி துணை அமைப்பாளர் சாத்ராக், தொண்டர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சுப்பிரமணியன், தலைமைக் கழகப் பேச்சாளர் சிவலூர் தனபால், ஜெபக்குமார், சிறுபான்மை அணி ஒன்றிய துணைச்செயலாளர் லியாஸ்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஆறுமுகநேரி:  புன்னக்காயலில் திமுக சார்பில் கிராமசபை சிறப்பு கூட்டம் நடந்தது. புன்னக்காயல்  செயலாளர் சோபியா தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, மக்களிடம் புன்னக்காயலில் தடுப்பணை கட்டப்பட்டு மீனவர்களின் பிரச்னை தீர்க்கப்படும். புன்னக்காயல் துண்டில் வளைவு குறித்து ஆய்வு செய்து பிரச்னைகளை தீர்க்க நடவ

டிக்கை எடுக்கப்படும்’’ என்றார். கூட்டத்தில் மாணவரணி மாநில துணைச் செயலாளர் உமரிசங்கர்,  இளைஞர் அணி மாவட்ட துணைச் செயலாளர் ராமஜெயம், மாநில பேச்சாளர் பாலசுப்பிரமணியன், ஆழ்வை ஒன்றிய திமுக செயலாளர் நவீன்குமார், விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் சதீஷ்குமார், தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளர் சுப்பிரமணியன், மேல ஆத்தூர் பஞ். மன்ற முன்னாள் துணைத்தலைவர் அக்பர், ஆத்தூர் திமுக பொறுப்பாளர் முருகப்பெருமாள், சேர்ந்தபூமங்கலம் திமுகசெயலாளர் சண்முகசுந்தரம், தனபால், அகில இந்திய கப்பல் மாலுமிகள் சங்கத் தலைவர் விமல்சன், வக்கீல் சாத்ராக், பரமன்குறிச்சி செயலாளர் இளங்கோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: