சாத்தான்குளம் அருகே தரமற்ற நிலையில் சாலை அமைப்பு

சாத்தான்குளம், பிப். 21: சாத்தான்குளம் அருகே பழனியப்பபுரத்தில் இருந்து சின்னமாடன்குடியிருப்புக்கு செல்லும் சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் கூறி  கண்டனம் தெரிவித்தனர். சாத்தான்குளம் அருகே கருங்கடல் ஊராட்சிக்கு உட்பட்ட பழனியப்பபுரத்தில் சின்னமாடன்குடியிருப்பு, தேர்க்கன்குளம், வழியாக நாசரேத், ஆழ்வார்திருநகரி செல்லும் சாலை உள்ளது. பல்லாண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இச்சாலை பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக மாறியது. இதனால் பாதிப்புக்கு உள்ளான கிராம மக்கள்,  இச்சாலையை விரைந்து சீரமைக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தினர்.

இதையடுத்து கடந்த வாரம்  பழனியப்பபுரத்தில் இருந்து சின்னமாடன்குடியிருப்பு வரை சுமார் 5 கி.மீ தொலைவுக்கு புதிதாக சாலை அமைக்கப்பட்டது. இருப்பினும் இந்த சாலை முற்றிலும் தரமற்ற நிலையில் அமைக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டிய மக்கள் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இதேபோல் பேய்க்குளத்தில் இருந்து செம்மன்குடியிருப்புக்கு செல்ல புதிதாக அமைக்கப்பட்ட சாலையும் தரமற்ற நிலையிலேயே உள்ளதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக பஸ் மற்றும் இதர வாகனங்கள் அடிக்கடி சென்று திரும்புகையில் உடைந்து சேதமடையும் அபாயம் நிலவுகிறது. இவ்வாறு புதிய சாலை தரமற்று அமைக்கப்பட்டதற்கு கிராம மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சாலையை கலெக்டர் நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு சாலையின் தரத்தை உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Related Stories: