கோவில்பட்டி அருகே செவல்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா நிறைவு

கோவில்பட்டி, பிப்.21: கோவில்பட்டி அருகே செவல்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா நிறைவு விழாவில் சிறப்பு திருப்பலி நடந்தது. விழாவில் கிறிஸ்தவ மக்கள் திரளாக கலந்து கொண்டனர். கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி பங்கான செவல்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 7ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி அன்று மாலை 6.30 மணிக்கு பசுவந்தனைரோடு செவல்பட்டி விலக்கு அருகில் புனித அந்தோணியார் ஆலய நுழைவு வாயில் திறக்கப்பட்டது. மதுரை அனுமந்தபட்டி தந்தை ஞானபிரகாசம் நுழைவு வாயிலை அர்ச்சிக்க, சேரன்மகாதேவி பங்குத்தந்தை ரெக்ஸ் ஜஸ்டின் திறந்து வைத்தார். பின்னர் பங்குத்தந்தை ரெக்ஸ் ஜஸ்டின் இரவு 7.30 மணிக்கு கொடியை ஜெபித்து கொடியேற்றி வைத்தார். பின்னர் புதிதாக வடிவமைக்கப்பட்ட தேக்கு மரத்தால் ஆன புதிய பீடம் அர்ச்சித்து திறக்கப்பட்டது. தொடர்ந்து திருவிழா 13 நாட்கள் நடந்தது. விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை மற்றும் சமபந்தி விருந்து நடந்தது.

Advertising
Advertising

12ம் திருவிழாவான கடந்த 18ம்தேதி இரவு 7.30 மணிக்கு சிறப்பு திருப்பலியை பாளை என்ஜிஓ காலனி சகாயமாதா ஆலய பங்குத்தந்தை அருள்அம்புரோசு தலைமையில் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து சப்பர பவனி நடந்தது. நிறைவு நாளான 19ம்தேதி காலை 8.30 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலியை வெங்கடாசலபுரம் பங்குத்தந்தை வில்சன் நிறைவேற்றினார். கருமாத்தூர் தூய ஆவியார் சபை தந்தை கென்னடி மறையுரையாற்றினார். தொடர்ந்து சப்பர பவனி நடந்தது. காமநாயக்கன்பட்டி பங்கை சேர்ந்தமக்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பங்குத்தந்தை அருள்ராஜ் தலைமையில் உதவி பங்குத்தந்தை சுந்தர் முன்னிலையில் செவல்பட்டி இறைமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: