தூத்துக்குடியில் நாளை தொடங்க இருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கான நேர்காணல் ஒத்திவைப்பு

தூத்துக்குடி, பிப்.21: தூத்துக்குடியில் நாளை முதல் மார்ச் 4ம் தேதி வரை நடைபெற இருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கான நேர்காணல் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்தவர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு நாளை (22ம் தேதி) முதல் மார்ச் 4ம் தேதி வரை தூத்துக்குடி, கால்நடை பன்முக மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற இருந்த நேர்காணல் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, தூத்துக்குடி, கால்நடை பராமரிப்புத்துறை, மண்டல இணை இயக்குநர் அலுவலகத்திலிருந்து நேர்காணல் கடிதம் கிடைக்கப் பெற்ற விண்ணப்பதாரர்கள் எவரும் நேர்காணலில் கலந்துக் கொள்ள வேண்டாம் எனவும், நேர்காணல் குறித்து புதிய தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அது குறித்து விண்ணப்பதாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: