திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் கொடை விழாவில் பக்தர்கள் பால்குடம் ஊர்வலம்

திருச்செந்தூர், பிப்.21: திருச்செந்தூர் 12ம் திருவிழா செங்குந்தர் மண்டபத்தில் சென்னை வாழ் அருப்புக்கோட்டை செங்குந்தர் வெயிலுகந்தம்மன் கோயில் பக்தர்கள் 33வது ஆண்டு கொடை விழா மற்றும் 11ம் ஆண்டு பால்குட விழாவை முன்னிட்டு பால்குட விழா கமிட்டி சார்பில் பால்குடம் ஊர்வலம் நடந்தது. இதையொட்டி நேற்று காலை செங்குந்தர் மண்டபத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதி வழியாக வெயிலுகந்தம்மன் கோயிலை சேர்ந்தது. அங்கு அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. பகலில் அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று மாலையில் கோயில் மண்டபத்தில் யாகசாலை பூஜை நடந்தது. இரவு 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வெயிலுகந்தம்மன் கோயிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்தை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: