×

திருவண்ணாமலை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க போர்க்கால நடவடிக்கை அவசியம் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

திருவண்ணாமலை, பிப்.21: குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்ககை எடுக்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகத்தில், திருவண்ணாமலை, செங்கம், தண்டராம்பட்டு, போளூர், கலசபாக்கம், கீழ்பென்னாத்தூர் உள்ளிட்ட பல்வேறு ஒன்றியங்களில் உள்ள ஊராட்சி மற்றும் வட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி, முன்னாள் எம்பி வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் சாவல்பூண்டி சுந்தரேசன் வரவேற்றார்.

கூட்டத்தில், மத்திய - மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்களிடம் தெரிவிக்கும் வகையில், ஊராட்சி சபா கூட்டம் நடந்த அனுமதித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால் ஏற்பட்டுள்ள வறட்சியால், இப்போதே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களை பெரிதும் பாதித்துள்ள குடிநீர் பிரச்னையை தீர்க்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், எம்எல்ஏக்கள் செங்கம் மு.ெப.கிரி, போளூர் கே.வி.சேகரன், முன்னாள் நகராட்சித் தலைவர் இரா.தரன், எ.வ.வே.கம்பன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சி.என்.அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : meeting ,Tiruvannamalai district ,executives ,DMK ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அருகே...