×

கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற பசுமைச்சாலை கருத்து கேட்பு கூட்டத்துக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு

கலசபாக்கம், பிப்.21: கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற பசுமை சாலை கருத்துகேட்பு கூட்டத்துக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னை- சேலம் 8 வழிச்சாலைக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாய நிலங்கள், வனப்பகுதிகள் 8 வழிச்சாலையால் பாதிக்கப்படுவதால், 8 வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், நேற்று கலசபாக்கம், போளூர் தாலுகாவுக்குட்பட்ட மேப்பத்துறை, பெலாசூர், ராந்தம், காம்பட்டு, பத்தியவாடி, தென்பள்ளிப்பட்டு, முத்தரசம்பூண்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு கருத்து கேட்பு கூட்டத்துக்காக 68 பேருக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.

கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் நிலம் எடுப்பு சிறப்பு டிஆர்ஓ வெற்றிவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற விவசாயிகள் 8 வழிச்சாலைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, 8 வழிச்சாலை வேண்டாம், விவசாய நிலங்கள்தான் வேண்டும் என கோஷமிட்டனர். மேலும், தங்கள் கருத்துக்களை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர். தொடர்ந்து, 8 வழிச்சாலை சம்பந்தமாக கருத்துகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதில் நிலம் எடுப்பு தாசில்தார் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்,

Tags : lighting meeting ,office ,Karasapakkam Taluk ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்