இன்றும், நாளையும் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் கனிமொழி எம்.பி. சுற்றுப்பயணம் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ அறிக்கை

தூத்துக்குடி, பிப். 20:  தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் இன்றும், நாளையும் (20, 21) திமுக மகளிர் அணி  மாநில செயலாளரும், திமுக நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி எம்.பி., பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதன்படி இன்று (20ம் தேதி) மாலை 4 மணிக்கு திருச்செந்தூர் தொகுதிக்கு உட்பட்ட குமாரப்பண்ணையூரில் அவரது எம்.பி. நிதியிலிருந்து ரூ.25 லட்சம் செலவில் கட்டப்படும் சமுதாயக்கூடம், மாலை 5 மணிக்கு அமலிநகரில் ரூ.25 லட்சம் செலவில் கட்டப்படும் சமுதாயக்கூடம், 5.30 மணிக்கு ஆலந்தலையில் ரூ.25 லட்சம் செலவில் கட்டப்படும் மீன் வலைக்கூடம், ரூ.10 லட்சம் செலவில் கட்டப்படும் ரேஷன் கடை கட்டிடம், மாலை 5 மணிக்கு உடன்குடி ஒன்றியம் மணப்பாட்டில் ரூ.9 லட்சம் செலவில் உயர் கோபுரமின் விளக்கு அமைத்தல் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

 தொடர்ந்து இரவு 7 மணிக்கு தண்டுபத்து கிராமத்தில் நடைபெறவுள்ள திருச்செந்தூர் தொகுதி வாக்குச்சாவடிமுகவர்கள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார்.
Advertising
Advertising

 நாளை (21ம் தேதி) காலை 10 மணிக்கு காயல்பட்டினத்தில் ரூ.75 லட்சம் செலவில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து காலை 11 மணிக்கு காயல்பட்டினம் வாவு வஜீஹா கலைக் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார். மாலை 6 மணிக்கு சிவகளை கிராமத்தில் நடைபெறவுள்ள வைகுண்டம் தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார். எனவே, நிகழ்ச்சிகளில் கட்சி நிர்வாகிகள், சார்பு அணியினர், வாக்குச்சாவடி முகவர்கள், கழக முன்னோடிகள், தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: