வீட்டுமனை வழங்கக்கோரி கோவில்பட்டி தாலுகா ஆபிஸ் முற்றுகை பொதுமக்கள் ஆவேசம்

கோவில்பட்டி, பிப். 20: வீடில்லாதவர்களுக்கு வீட்டுமனை வழங்க கோரி கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள முற்றுகையிட்டனர்.

 கோவில்பட்டி தாலுகாவில் ஏழ்மை நிலையில் உள்ள மருத்துவ சமுதாய மக்கள், முடிதிருத்தும் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் வீடு இல்லாத தங்களுக்கு வீட்டுமனை வழங்கக்கோரி மருத்துவ சமூகத்தினர் 5வது தூண் அமைப்பு நிறுவனர் சங்கரலிங்கம் தலைமையில் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

 மேலும் அருகேயுள்ள மந்தித்தோப்பு கிராமத்தில் (புல எண் 124ல்) வீட்டுமனை வழங்க வேண்டும். மனை வழங்கும்பட்சத்தில் அரசு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மனை கிடைக்கப்பெற்ற ஓராண்டுக்குள் வீடுகள் கட்டி குடியிருப்பதாகவும், எக்காரணத்தை கொண்டும் மனைகளை வேறு யாருக்கும் கிரையமோ அல்லது வேறு வில்லங்கமோ செய்யமாட்டோம் எனக்கூறியதோடு தங்களுக்கு தாமதமின்றி  வீட்டுமனை வழங்கக்கோரி  மருத்துவ சமுதாயத்தினர் தாலுகா அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். பின்னர்  தாசில்தார் பரமசிவத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.இதில் மாவட்ட அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் கருப்பசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், நகரத் தலைவர் செல்வம், மகளிர் அணி  மாவட்டத் தலைவர் சுசீலா, மகளிர் அணி நகரத் தலைவர் முருகேஸ்வரி என திரளானோர் பங்கேற்றனர்.

Related Stories: