வாகைகுளம் ஸ்காட் வேளாண் அறிவியல் மையத்தில் மாசில்லா தொழில்நுட்ப பயிற்சி முகாம்

புதுக்கோட்டை, பிப். 20: புதுக்கோட்டை அருகேயுள்ள வாகைககுளம் ஸ்காட் வேளாண்  அறிவியல் மையத்தில் நபார்டு வங்கியுடன் இணைந்து சிறுபண்ணையாளர்களுக்கு கறவை மாடு வளர்ப்பில் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில் மாசில்லா தொழில்நுட்ப பயிற்சி முகாம்  3 நாட்கள் நடந்தது.

 பிரதம மந்திரியின் விவசாயிகள் வருமானத்தை 2022க்குள் இரட்டிப்பாக்கல் என்ற திட்டத்தின் கீழ் இம்முகாம் நடந்தது. முதல் நாளில் கால்நடை வளர்ப்பில் உள்ள பிரச்னைகளுக்கான தீர்வுகளை ஸ்காட் வேளாண் அறிவியல் மைய முதன்மை விஞ்ஞானியான டாக்டர் சீனிவாசன் கால்நடை  விளக்கிக் கூறினார். 2ம் நாள் நெல்லை கால்நடை அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் விஜயகுமார் கறவைமாட்டிற்கான தீவனம், ஊட்டச்சத்து குறித்துப் பேசினார். உதவிப் பேராசிரியர் சத்யபாரதி கறவை மாடு வளர்ப்பு, பராமரித்தலை விளக்கினார். முகாம் நிறைவுநாளன்று பயிற்சியில் பங்கேற்ற அனைவரும் வாகைக்குளம் வேளாண் அறிவியல் மையத்திற்கு அழைத்துவரப்பட்டனர். இவர்களுக்கு பசுந்தீவன வளர்ப்பு முறைகள், மண்ணில்லா பசுந்தீவன வளர்ப்பு, அசோலாவளர்ப்பு, மண்புழுஉரம் தயாரித்தல், பஞ்சகவ்யம் மற்றும் பூச்சிவிரட்டி போன்ற இயற்கை வேளாண்மை இடுபொருட்கள் தயாரிக்கும் முறைகள் பற்றியும் வேளாண் அறிவியல் மைய தொழில் நுட்ப வல்லுநர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.  முகாம் நிறைவு விழாவில், நபார்ட் வங்கி பொது மேலாளர் விஜயபாண்டியன், வேளாண் அறிவியல் மைய முதன்மை விஞ்ஞானி (பொ) டாக்டர் சீனிவாசன் மற்றும் பிற வல்லுநர்கள் உள்ளிட்டோர் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ், கால்நடை வளர்ப்பு குறித்த  கையேடு வழங்கினர். ஏற்பாடுகளை வேளாண் அறிவியல் மைய வல்லுநர்கள் செய்திருந்தனர்.

Related Stories: