ஜான்ஸ் கல்லூரியில் கருத்தரங்கு

நெல்லை, பிப். 18: பாளை ஜான்ஸ் கல்லூரியில் வரலாற்றத்துறை சார்பில் சுற்றுலா புதுமைகளும் அதன் வளர்ச்சியும் என்ற தலைப்பில் 2 நாள் கருத்தரங்கு நடந்தது. முதல்வர் ஜான்கென்னடி வேதநாதன் தலைமை வகித்தார். கொச்சின் பல்கலைக்கழக பொருளாதார துறைத்தலைவர் அருணாசலம் துவக்கி வைத்தார். இலங்கை பால்டிகோலா கல்வி நிறுவன இயக்குனர் ஜெயபாலன், தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் ஹிலானி, பேராசிரியர் இஸ்மாயில், இலங்கை புளுஸ்கை கல்வி இயக்குனர் ரகுலன், ஈஸ்ட் கல்வி ஆய்வு நிறுவனர் பரமரசிவன் பேசினர். சிறந்த கட்டுரைகளுக்கு பரிசளிக்கப்பட்டது. முன்னதாக வரலாற்று துறைத்தலைவர் ஆண்ட்ரூஸ் வரவேற்றார். கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

ஏற்பாடுகளை பேராசிரியர்கள் பர்னபாஸ் ேஜக்கப், ஜெபமணி மான்சிங், ஸ்டாலின் டேவிட், ஜோசப்ராஜ், ஜெயசிங், ஸ்டேல்லா செய்திருந்தனர்.

Related Stories: