மானூர் அருகே பெண் அரசு ஊழியருக்கு மிரட்டல் சகோதர்கள் உள்பட 7 பேர் மீது வழக்கு

நெல்லை, பிப். 20: மானூர் அருகே பஞ்சாயத்து பெண் ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த மூன்று பெண்கள் உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேவர்குளம் அருகேயுள்ள மூவிருந்தாளி பஞ்சாயத்தில் சீனி செல்வி (45) என்பவர் கிளார்க்காக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மூவிருந்தாளி பஞ்சாயத்து சார்பில் அங்குள்ள அரசு புறம் போக்கு நிலத்தில் ஆழமாக தோண்டி அதனுள் கழிவு நீரை விடுவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகிறது. மேலும் சம்பந்தப்பட்ட நிலத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் வேலை நேற்று நடந்து கொண்டிருந்தது.

அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சுப்பையா மகன் குப்புராஜ் (45), ்அவரது சகோதரர்கள் அரிசந்திரன் (47), கிருஷ்ணசாமி (55), அவரது மனைவி மாரியம்மாள் (50), அவரது மகன் சுனில் பிரபாகரன் (27), மருமகள் நிவேதா (25), மகள் சபீதா (25) ஆகிய 7 பேர் சீனி செல்வியிடம், இங்கு கழிவு நீருக்கு பள்ளம் தோண்டக்கூடாது என தகராறு செய்து, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து தேவர்குளம் போலீசில் சீனிசெல்வி புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி குப்புராஜ், அரிசந்திரன், கிருஷ்ணசாமி உட்பட 7 பேர் மீது அரசு பணி செய்யவிடாமல் தடுத்தது, கொலை மிரட்டல், பெண் வன்ெகாடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories: