பாளை சேவியர் கல்லூரி கருத்தங்கில் கவிஞர் கலாபிரியா பேச்சு

நெல்லை, பிப். 20: தமிழ்துறையில் பயிலும் மாணவர்கள் பட்டம் பெறுவதுடன் மட்டும் நிற்காமல் பிரபல எழுத்தாளர்கள் போன்று புகழ்பெற வேண்டும்.  இதற்காக கொட்டி கிடக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என பாளை சேவியர் கல்லூரியில் நடந்த தேசிய கருத்தரங்கில் பங்கேற்ற சாகித்ய அகாடமி விருது பெற்ற படைப்பாளர் கவிஞர் கலாபிரியா பேசினார்.

பாளை சேவியர் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் பொருநை பதிவுகளும் பன்முக எழுத்தாழு மைகளும் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடந்தது. துறைத்தலைவர் பிரான்சிஸ் சேவியர் வரவேற்றார். கல்லூரி முதல்வர் பிரிட்டோ தலைமை வகித்தார். கல்லூரி அதிபர் ஹென்றி ஜெரோம், செயலாளர் அந்தோணிசாமி மற்றும் பலர் பேசினர். விழாவில் சாகித்ய அகாடமி விருது பெற்ற படைப்பாளர் கவிஞர் கலாபிரியா  பங்கேற்று கருத்தரங்கை துவக்கி வைத்து ேபசியதாவது:

தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பொருநை மண்ணுக்கு அதிக பங்கு உள்ளது. தாமிரபரணி நதியின் மகிமையால் ஏராளமான தமிழ்படைப்பாளிகள் உலக அளவில் புகழ்பெற்றுள்ளனர். தமிழ் இலக்கியம், மேடை பேச்சு, அரசியல், கட்டுரை என அனைத்து துறைகளிலும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் புகழ் பெற்றுள்ளனர். தமிழில் புலமை பெற்ற புலவர்கள், பேச்சாளர்கள்  பயின்ற கல்லூரி என்ற பெருமை இக்கல்லூரிக்கு உள்ளது.

 எங்களை போன்ற தமிழ் எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க அதிக ஆண்டுகள் தேவைப்பட்டது. இளைஞர்களாகிய உங்களுக்கு தமிழ்த்துறையில் புகழ்பெற அதிக வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. மிகச்சிறந்த ஆசிரியர்களாகவும் படைப்பாளிகளாகவும் விளங்க முடியும். ஒரு பட்டத்திற்காக மட்டும் சிலர் தமிழ்த்துறையை தேர்வு செய்து படிக்கின்றனர். அந்த எண்ணம் மட்டுமே போதாது, தமிழின் உச்சத்தை அடைய, கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்தவர்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித் தனர். நிகழ்ச்சியில் ரவி சேசுராஜ், இருதயராஜ், பாண்டியன், கந்தன், அன்பரசு  மற்றும்  பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். உதவி பேராசிரியை அந்தோணி சகாயசோபியா, அந்தோணிராஜ் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

Related Stories: