நெல்லை தாமிரபரணி நதிக்கு சிறப்பு ஆரத்தி பூஜை

நெல்லை, பிப். 20: புஷ்கர திரு

விழாவை நினைவூட்டும்

விதமாக நெல்லை சந்திப்பு

தைப்பூச மண்டபம், தாமிர பரணி நதியில் நேற்றிரவு சிறப்பு ஆரத்தி வைபவம் நடந்தது.

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றின் பல பகுதிகளில் கடந்த அக்டோபர் மாதம் 12ம் தேதி முதல் 23ம் தேதி வரை தாமிரபரணி புஷ்கர திருவிழா நடந்தது. இதில் லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இவ்விழாவை நினைவு கூறும் வகையிலும், மாசி மகம் பவுர்ணமியை யொட்டியும்  நேற்றிரவு நெல்லை தைப்பூச மண்டபத்தில் வேத மந்திரங்கள் முழங்க, தாமிரபரணி நதியில் புனித நீர் மற்றும் பூக்களால் சிறப்பு வழிப்பாடும், சிறப்பு ஆரத்தியும் நடந்தது. இதனையடுத்து நெல்லை சந்திப்பு கைலாசநாதர் சவுந்திரவல்லி அம்பாள் கோயிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் 108ம் சங்காபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும், சிறப்பு வழிபாடும் நடந்தது. இதனையடுத்து சுவாமியும், அம்பாளும் சிவிகி வாகனத்தில் கோயில் பிரகாரத்தை சுற்றி வந்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Related Stories: