வரவு - செலவு பற்றாக்குறையை அரசு ஏற்க வலியுறுத்தி நெல்லையில் அரசு போக்குவரத்து கழக சிஐடியு தொழிலாளர்கள் தர்ணா

நெல்லை,பிப்.20: அரசு போக்குவரத்து கழக வரவு - செலவு பற்றாக்குறையை அரசு ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை வண்ணார்பேட்டை பொதுமேலாளர் அலுவலகம் முன்பு சிஐடியு தொழிலாளர்கள் தர்ணா போராட்டம் நடந்தது.

அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டலம் வண்ணார் பேட்டை பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நடந்த தர்ணா போராட்டத்துக்கு போக்குவரத்து கழக சிஐடியு தொழிலாளர் சங்க தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் மோகன் தர்ணா போராட்டத்தை துவக்கி வைத்தார். சம்மேளன உதவி செயலாளர் வாசுதேவன் சிறப்புரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள், பொது செயலாளர் ஜோதி, சம்மேளன குழு உறுப்பினர்கள் சிவக்குமார், தங்கதுரை ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். துணை தலைவர்கள் வின்சென்ட், மரிய ஜான்ரோஸ், குமரகுருபரன்,வெங்கடசாமி, பாலசுப்பிரமணியன், ஜாண்கென்னடி மாணிக்கம், சங்கையா, பாலகிருஷ்ணன், சிவக்குமார், பழனிகுமாரசாமி, பேராட்சி செல்வன், நம்பிராஜன், முருகேசன், ராமசாமி, ஓய்வு பெற்ற தொழிலாளர் நல அமைப்பு பொதுசெயலாளர் முத்துகிருஷ்ணன், சிஐடியு மாவட்ட தலைவர் வேல்முருகன் தர்ணா போராட்டத்தை முடித்து வைத்து பேசினார்.

போராட்டத்தின் போது, போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும், செலவுக்கும் உள்ள பற்றாக்குறையை அரசு ஏற்க வேண்டும். 240 நாள் பணி முடித்த சேமநல, தினக்கூலி பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணபலன்களை முழுமையாக வழங்க வேண்டும். பிரதி மாதம் முதல் தேதி சம்பளம், ஓய்வூதியம் வழங்க வேண்டும். தொழிலாளர் விரோத போக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. பொருளாளர் மணி நன்றி கூறினார்.

Related Stories: