×

பெல் ஐஎன்டியூசி தொழிற்சங்க விளக்க பொதுக்கூட்டம்

திருவெறும்பூர், பிப்.20: பெல் நிறுவனத்தின் ஐஎன்டியூசி ஐஎன்டியூசி தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கைகள் குறித்த விளக்கபொதுக்கூட்டம் நேற்று நடந்தது.
திருச்சி பெல் நிறுவன தொழிலாளர்களின் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த பேச்சுவார்த்தையில் சில சங்கங்கள் கையெழுத்திட்டது அதற்கு சிஐடியு, ஏடிபி, பிஎம்எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கையெழுத்திட மறுத்து வெளியேறியது. இந்த நிலையில் அந்த தொழிற்சங்கங்கள் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை கைவிட்டு தொழிலாளர்களின் சாதகமான சில மாற்றாங்களை செய்து புதிய ஊதிய மாற்று  ஒப்பந்தம் போட வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறது. இந்நிலையில் ஐஎன்டியூசி  தொழிற்சங்க அகில இந்திய தலைவர் சஞ்சீவரெட்டியின் 89வது பிறந்த நாள் விழா  மற்றும் விளக்க பொதுக்கூட்டம் திருச்சி பெல் ஐஎன்டியூசி தொழிற்சங்கம் சார்பில் பெல் எம்டி ஹாலில் நடந்தது. அதில் கலந்து கொண்ட சஞ்சீவரெட்டி பெல் தொழிலாளர்களின் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் குறித்தும், வெல்டர் தொழிலாளர்கள் வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள தீபாவளி போனஸ், ஊதியம் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் மற்றும் பெல் பாதுகாவல் துறையில் உள்ள  பிரச்னைகள் குறித்து விளக்கி பேசினார். இந்த கூட்டத்தில் பெல் ஐஎன்டியூசி தொழிற்சங்க நிர்வாகிகளும், தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி