அஞ்சல் துறையில் பணபரிவர்த்தனைகள் நடந்தால் உடனடி எஸ்எம்எஸ் தகவல் திருச்சி தலைமை அஞ்சலக அதிகாரி தகவல்

திருச்சி, பிப். 20: தபால் நிலையத்தில் பணம் பரிவர்த்தனைகள் நடந்தால் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக இலவச எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும் என்று திருச்சி தலைமை அஞ்சலக அஞ்சல் துறை தலைவர் அம்பேஷ்உப்மன்யு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அஞ்சலக சேமிப்புதாரர்கள் அவர்களது அஞ்சலக சேமிப்பு கணக்குகளில் பணம் செலுத்துதல், பணம்பெறுதல் மற்றும் ஏடிஎம் இணைய வங்கி சேவை மூலம் பரிமாற்றங்கள் செய்யும்போது இந்திய அஞ்சல்துறை, அவர்களுக்கு பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு இலவச எஸ்எம்எஸ் மூலம் பரிவர்த்தனை விவரங்கள் அனுப்படும். இதன்மூலம் அஞ்சலக சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் அவர்கள கணக்குகளில் நடக்கும் பரிவர்தனைகளுக்கு உடனுக்குடன் எஸ்எம்எஸ் தகவலைப்பெற்று மோசடி பரிவர்த்தனைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ளளாம். அஞ்சலக சேமிப்பு வங்கி வாடிக்கையாளர்கள் எஸ்எம்எஸ் தகவல்கள் பெறவில்லை என்றால், அவர்கள் கணக்கு வைத்திருக்கும் அஞ்சலகத்தில் சிஐஎப் ஐடியில் செல்போன் எண்ணை படிவம் சமர்ப்பித்து இணைத்துக் கொள்ளளாம்.

மேலும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை அளிக்க அவர்களது அனைத்து அஞ்சலக கணக்குகளும் ஒரே சிஐஎப் ஐடி யில் உள்ளதா என்று சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுத்தப்படுகிறார்கள். அஞ்சலக சேமிப்பு கணக்குகளுக்கு மட்டுமல்லாது, காப்பீட்டு சேவைகள்(அஞ்சலகஆயுள்காப்பீடு&கிராமியஅஞ்சலகஆயுள்காப்பீடு) மற்றும் துரித அஞ்சல், பதிவுதபால்/பார்சல்சேவைகளுக்கும் இலவசமாக எஸ்எம்எஸ் தகவல்கள் வழங்கப்படுகின்றன.

எனவே, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்குவதற்கு அவர்களது செல்போன் எண்ணை அனைத்து அஞ்சல்துறை சேவைகளுக்கும் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: