தீவிரவாத தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி

தா.பேட்டை, பிப்.20:  காஷ்மீர் மாநிலத்தில் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமமாக மவுன ஊர்வலம் நடைபெற்றது.

நிகழ்ச்சியை முன்னிட்டு துறையூர் பாலக்கரையில் இருந்து திருச்சி ரோடு  வழியாக துறையூர் பேருந்து நிலையம் வரை மவுன ஊர்வலம் நடைபெற்றது. அப்போது  வீரர்களின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.  நிகழ்ச்சியில் வக்கீகள் சங்கம், ரோட்டரி, வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள், சமூக  ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மண்ணச்சநல்லூர்:    தீவிரவாத தாக்குதலில் பலியான இந்திய ராணுவ வீரர்களுக்கு மண்ணச்சநல்லூரில் சமூக ஆர்வலர்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மவுன அஞ்சலி செய்யப்பட்டது.    மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தாக்குதலில் பலியான வீரர்களின் உருவப்படங்களை கைகளில் ஏந்தியவாறு மண்ணச்சநல்லூரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தில் மண்ணச்சநல்லூர் வியாபாரிகள் சங்கம், லயன்ஸ் சங்கம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.

லால்குடி:      லால்குடியில் அனைத்து வியாபாரிகள் நல சங்கம் சார்பில் காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி அமைதி பேரணி நடைபெற்றது.

 லால்குடியில் அனைத்து வியாபாரிகள் நல சங்கம், லால்குடி அரிமா சங்கம், மருந்து வணிகர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், மற்றும் மாணவ, மாணவிகள் சார்பில் காஷ்மீரில் உயிரிழந்த 44 ராணுவ வீரர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைதி பேரணி நடைபெற்றது. பேரணி லால்குடி சந்தைபேட்டையில் இருந்து முக்கிய சாலைகள் வழியாக சென்று சிறுதையூர் ரவுண்டானா, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பஸ் நிலையம், தாலுகா அலுவலகம் வழியாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை வந்தடைந்தது. பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், கலந்துகொண்டனர். முன்னதாக பேரூராட்சி செயல் அலுவலர் குமரன் பேரணியை தொடங்கி வைத்தார். நிறைவாக சிறுதையூர் ரவுண்டானாவில் உயிர் நீத்த இந்திய ராணுவ வீரர்கள் உருவப்படத்திற்கு மலர்தூவி மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: