கனிமவளம் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

தா.பேட்டை, பிப்.20:  முசிறி, தொட்டியம் பகுதிகளில் கனிம வளம் கடத்திய 12 லாரிகள், ஒரு பொக்லைன் இயந்திரம், 2 வேன், 5 மாட்டு வண்டிகள் வருவாய் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருச்சி கலெக்டர் முசிறி, தொட்டியம் பகுதிகளில் காவிரி ஆற்று மணல்  திருடப்படுவதை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.  இதையடுத்து முசிறி ஆர்டிஓ ரவிச்சந்திரன் மேற்பார்வையில் வருவாய் துறையினர்  தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது முசிறி, தொட்டியம் பகுதிகளில்  மணல் திருடிச்சென்ற 12 லாரிகள், ஒரு பொக்லைன் இயந்திரம், இரண்டு வேன், 5  மாட்டுவண்டிகள் பிடிப்பட்டது. இதையடுத்து வாகனங்கள் பறிமுதல்  செய்யப்பட்டது. கனிமவளம் திருடிய குற்றத்திற்காக வாகனங்களின்  உரிமையாளர்களிடமிருந்து 4 லட்சத்து 642 ரூபாய் அபராதம் விதித்து  உத்தரவிட்டுள்ளார். ஆர்டிஓ கனிம வளம் கடத்தும் நபர்கள் மீது கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: