ஸ்கோப் திட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு பயிற்சி

உடுமலை, பிப். 20: பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள் பாடம் தொடர்பான ஆழ்ந்த அறிவை பெறும்வகையில், செயல் திட்ட அறிக்கை தயார் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மாவட்டத்துக்கு 20 அரசு பள்ளிகள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணிதம், பொருளியல் பாட மாணவர்கள் இதில் பங்கேற்க வேண்டும். இது தொடர்பாக, ஸ்கோப் எனப்படும் பயிற்சி தமிழகத்தில் உள்ள முதுநிலை ஆசிரியர்களுக்கு சென்னை, மதுரையில் அளிக்கப்பட்டது. இதில், உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயற்பியல் ஆசிரியர் சிவக்குமார் கலந்து கொண்டார்.

திருப்பூர் மாவட்டத்தில் 20 அரசு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, செயல் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்துவருகிறது. இதன்படி, உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி மேற்பார்வையில், உயிரியல் ஆசிரியர் வழிகாட்டலின்படி, இப்பள்ளி மாணவிகள் ரத்தப்பரிசோதனை நிலையத்துக்கு சென்று ரத்த சர்க்கரை தொடர்பான தரவுகளை பெற்றனர். மேலும் தாவர வளர்ச்சி தொடர்பான திட்ட அறிக்கை தயாரிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த செயல் திட்ட அறிக்கை தேர்வு செய்யப்பட்டு, மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்பட உள்ளது.

Advertising
Advertising

Related Stories: