உணவுப்பொருள் உரிமம் பெற தாராபுரத்தில் இன்று சிறப்பு முகாம்

தாராபுரம். பிப்.20: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உணவுபொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்களில் கலப்படத்தை தடுக்க ஒவ்வொருவரும் கட்டாய உரிமம் பெற்றிருக்க வேண்டும் என மாவட்டஉணவுப்பொருள் பாதுகாப்பு மற்றும் கலப்பட தடுப்புபிரிவு அதிகாரி தமிழ்செல்வன் கூறியுள்ளார்.  தாராபுரத்தில் மாவட்ட உணவுப்பொருள் பாதுகாப்பு மற்றம் மருந்து நிர்வாகத்துறை, கலப்பட தடுப்புபிரிவு அதிகாரி தமிழ்செல்வன் கூறியுள்ளதாவது:

தாராபுரம் நகராட்சி, ஊராட்சி ஒன்றிய கிராமப்பகுதிகள், மடத்துக்குளம், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் ஒருசில உணவுபொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை கடைகளில் தரமற்ற உடலுக்குதீங்கு விளைவிக்கும் கலப்பட பொருட்கள் அதிகஅளவில் விற்பனை செய்யபடுவது அண்மையில் நடைபெற்ற அதிகரிகளின் நேரடி ஆய்வில் தெரியவந்துள்ளது. கலப்படபொருட்கள் வைத்திருப்போர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை தவிர்க்க, உணவுபொருட்களை தயாரித்து, விற்பனை செய்யும் நிறுவனங்கள், மளிகைகடைகள், பேக்கரிகள், டீஸ்டால்கள், காய்கறிகடைகள், இறைச்சி, மீன் விற்பனை கடைகள், பெட்டிக்கடைகள் உள்ளிட்டவைகள் உணவுபாதுகாப்பு உரிமம் பெற்றிருக்க வேண்டும், இதுவரை உரிமம் பெறாதவர்கள், உரிமம் இருந்தும் அதை புதுப்பிக்க தவறியவர்கள் தங்கள் நிறுவனங்களின் உரிமங்களை இன்று தாராபுரம் பார்க்சாலையில் உள்ள வர்த்தக கழக திருமணமண்டபத்தில் காலை 10 மணிக்கு நடக்கும் சிறப்பு முகாமில் புதுப்பித்துக்கொள்ளாலாம்.

Related Stories: