காமாட்சியம்மன் கோயிலில் தேர்த்திருவிழா கோலாகலம்

அவிநாசி,பிப்.20: அவிநாசி அருகே தேவராயன்பாளையம் காமாட்சியம்மன் கோயிலில் 96ம் ஆண்டு பொங்கல், தேர்த்திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

கோயிிலில் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று அதிகாலை 4 மணிக்கு, விநாயகருக்கு, 108 தீர்த்தகுடம்  அபிஷேகம், காலை 11 மணிக்கு காமாட்சியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல், பகல் 12 மணிக்கு அம்மனுக்கு பொங்கல் வைத்தல்,  மகாஅபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனைகளும், கூட்டு வழிபாடுகளும் நடைபெற்றது.
Advertising
Advertising

மாலை 3 மணிக்கு அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல்,  முளைப்பாலிகை எடுத்துவருதல் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்துக்கொண்டு திருவீதி உலாவந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை 5 மணியளவில், காமாட்சியம்மன் திருத்தேர் வடம் பிடித்து, திருவீதிகள் வலம் வருதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் வாகீசர் மடாலயம் காமாட்சிதாசசுவாமிகள் தலைமையில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

விழாவில்  வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, காலை முதல் மாலைவரை அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை,  தேவராயம்பாளையம் திருவிழாக்குழுவினர் மற்றும் ஊர்ப்பொது மக்கள் செய்து இருந்தனர்.

Related Stories: