×

மோடி வருகையின் போது போலீஸ் தாக்கினர் பனியன் தொழிலாளி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா

திருப்பூர், பிப்.20: திருப்பூரில், கடந்த 10ம் தேதி பிரதமர் வருகையின் போது, பனியன் தொழிலாளியை தாக்கிய போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நேற்று திருப்பூர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, அவினாசியை அடுத்த பெரியாயிபாளையம் கனகராஜ் (39) என்பவர் கூறியதாவது: நான் இதேபகுதியில், தையல் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறேன். எனது மனைவி நாகமணி (35). எங்களுக்கு  இரு குழந்தைகள். மூத்த மகள் பிளஸ் 1 படித்து வருகிறார். மகன் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 10ம் தேதி பெருமாநல்லூர் அருகே பிரதமர் மோடி வந்திருந்தார்.
அவரை பார்க்கச் சென்றேன். அப்போது கூட்டத்தின் முன்பாக சென்று, அவருக்கு நான் தைத்திருந்த டீ-சர்ட்டை வைத்திருந்தேன். இதைப்பார்த்த அங்கிருந்த போலீஸ் ஒருவர், என்னை வேனில் ஏற்றி தாக்கினார். மேலும், தகாத வார்த்தைகளில் பேசினார். ஆகவே, சம்பந்தப்பட்ட போலீஸ் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  
இதையடுத்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர், இதுகுறித்து, மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் கயல்விழியிடம் கனகராஜ் மனுவாக அளித்தார்.


Tags : Modi ,visit ,
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...