சின்னதம்பியால் பயிர்கள் சேதம் கணக்கெடுப்பு பணி தீவிரம்

உடுமலை, பிப். 20: உடுமலை பகுதியில் 18 நாட்களாக முகாமிட்ட காட்டு யானை சின்னதம்பியால் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டன. கரும்பு, வாழை, நெல் வயல்களுக்குள் புகுந்து சென்றதால் பயிர்கள்  சேதமடைந்தன. இவற்றுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வனத்துறையினர், வேளாண் துறையினர், வருவாய்த்துறையினர், தோட்டக்கலைத்துறையினர் இணைந்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணாபுரம் பகுதியில் நடராஜ், கண்ணாடிபுத்தூர் வடக்கு பகுதியில் தேவராஜ், செந்தில், நடராஜ், ஆறுமுகம், கருப்புசாமி, ஈஸ்வரன், மகாலிங்கம், சேதுராமன், சசிகலா ஆகிய விவசாயிகளின் பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

அதிகாரிகள் குழுவினர் சென்று பயிர் சேதத்தின் மதிப்பு குறித்து கணக்கெடுக்கின்றனர். இதுபற்றி அரசுக்கு அறிக்கை அனுப்பி, அதன் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

கணக்கெடுப்பு குழுவில் வனச்சரகர்கள் முருகேசன் (அமராவதி) கணேஷ்ராம் (பழனி), மகேஷ் (திருப்பூர்), வனவர் கோபாலகிருஷ்ணன், வேளாண் துறை அலுவலர் வெங்கடேஷ்

தலைமையில் 3 பேர் மற்றும் வருவாய்த்துறையினர் இடம்பெற்றுள்ளனர்.

Related Stories: